திருச்சி கருமண்டபம் அமுதம் ஹோட்டலில் இட்லி வாங்க சென்ற வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த மேலாளர்
நம்பர் 1, கிழக்கு கடற்கரை சாலை, கல்யாணசுந்தரம் நகர், IOB நகர், கருமண்டபம், திருச்சிராப்பள்ளி, 1 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் அமுதம் ரெசிடென்சியில் காலை டிபன் வாங்க சென்ற வழக்கறிஞர் திலீபன் என்பவர் அந்த ஹோட்டலில் பில் போடும் மேலாளரிடம் இட்லிக்கு பில்லு போடுப்பா என்று வழக்கறிஞர் கூறி இருக்கிறார் என்ன வாப்பா , போப்பான்னு பேசுற என்று கேட்டிருக்கிறார் . இதில் என்ன தவறு இருக்கிறது என்று வழக்கறிஞர் கேட்டிருக்கிறார் , அப்படி என்றால் நான் உன்னை வாடா, போடா என்று கூப்பிடுகிறேன் என்று கூறி ஒருமையில் திட்டி கெட்ட வார்த்தை பேசி செல்போனால் அடிக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்த பில் மேலாளரை செசன்ஸ் காவல் நிலையம் காவலர்கள் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் .
வழக்கறிஞரை தாக்க முயன்ற இந்த நிகழ்வு வழக்கறிஞர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், காவல்துறையினர் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

