Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மனு அளிக்கச் சென்ற நபர் மீது துணை சபாநாயகர் தாக்குதல் நடத்திய புகாரில் உரிய விசாரணை நடத்த வேண்டும். திருச்சியில் நயினார் நாகேந்திரன் பேட்டி

0

'- Advertisement -

தமிழக மக்களின் நலனே முக்கியம் மேகதாது அணை கட்ட தமிழக பாஜக தலைவர்கள் ஆதரவு அளிக்கவில்லை

Ad banner

திருச்சியில் நயினார் நாகேந்திரன் பேட்டி.

தமிழக மக்களின் நலனே முக்கியம். மேகதாது அணை கட்ட தமிழக பாஜக தலைவர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்று திருச்சியில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்

திருச்சிக்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் , ,அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. தீபாவளி தினத்தன்று தேனியில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு சம்பவத்தில் காவல் ஆய்வாளர் மீது அரிவாளால் தாக்குதல் நடத்த முயற்சி நடந்துள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை யார் உறுதி செய்வார்கள்?

காவல்துறையில் பணியாற்றும் தலைமைக்காவலர் முதல் எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ. உள்ளிட்ட அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். இதற்கு முதலமைச்சர் உடனடியாக ஒப்புதல் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீபாவளி நாளில் மட்டும் தமிழகத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த ஆறு மாதங்களில் 40 முதல் 50-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொறுப்பான அமைச்சர்கள் அலட்சியமாகப் பேசுவது ஏற்புடையதல்ல.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக எழுந்த புகாரில் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உரிய விளக்கம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சியில் மனு அளிக்கச் சென்ற நபர் மீது துணை சபாநாயகர் தாக்குதல் நடத்தியதாக எழுந்துள்ள புகாரில் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

தமிழக பாஜக தலைவர்கள் யாரும் மேகதாது அணை கட்டுவதற்கு ஆதரவு அளிக்கவில்லை.

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக பாஜகவின் நிலைப்பாடு எதிரானது. கர்நாடகத்தில் எந்த அணையும் கட்டக்கூடாது என்பதே எங்களது உறுதியான நிலைப்பாடு. தமிழக மக்களின் நலனும், தமிழகத்தின் நீராதார உரிமைகளும் முக்கியம். பாஜக தலைவர்கள் ஆதரவு அளிப்பதாகக் கூறுபவர்கள், எந்தத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள் என்பதைப் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் முறைகேடு விவகாரத்தில் பதிப்பகங்களின் முகவரிகள், நூலாசிரியர்களின் விவரங்கள், புத்தகங்களின் உண்மைத்தன்மை ஆகியவை முறையாகச் சரிபார்க்கப்பட வேண்டும். விசாரனண நடத்த வேண்டும்.

மேலும், விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்வதாகத் தேர்தலுக்கு முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் உரங்களின் விலை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

தமிழகத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாக முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நைனார் நாகேந்திரன் கூறினார்..

இந்த நிகழ்வில் ஏராளமான பாரதிய ஜனதா நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.