திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 61 ஆயிரத்து 238 வாக்காளர்கள்,
6 ஆயிரத்து 632 பேர் நீக்கம் . வரைவு வாக்காளர் பட்டியலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தயாள் வெளியீட்டார் ….
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரத்திக் தயாள் வெளியிட்டார் திருச்சி மாவட்டத்தில்
மொத்தம் 21 லட்சத்து 61 ஆயிரத்து 238 வாக்காளர்கள் உள்ளனர்.
6 ஆயிரத்து 632 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்
திருச்சி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரத்தீக் தாயள் வெளியிட்டார். அதில் 6.4.26 படி வாக்காளர்கள் எண்ணிக்கை 21 லட்சத்து 47 ஆயிரத்து 051 ஆக இருந்தது. சிறப்பு சுருக்க முறை திருத்தம் படி 12.11.26 வரைவு வாக்காளர் பட்டியலின் படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையாக 21 லட்சத்து61 ஆயிரத்து 238 ஆக உள்ளது.
இதில் ஆண்கள் 10 லட்சத்து 47 ஆயிரத்து 448 பெண்கள் 11 லட்சத்து 13 ஆயிரத்து 872 இதர பிரிவினர் 318. இதில் கூடுதலாக ஆண் வாக்காளர்கள் 6 ,148 பேரும், பெண் வாக்காளர்கள் 2,031 பேரும், இதர பிரிவினர் 8 பேரும் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர் திருச்சி மாவட்டத்தில் 6,332 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். திருத்தப்பட்டவரைவு வாக்காளர் பட்டியலில் திருச்சி மாவட்டத்தில்
அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதி ஸ்ரீரங்கம். இங்கு 2 லட்சத்து 88 ஆயிரத்து 911 வாக்காளர்கள் உள்ளன. குறைந்த வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி துறையூர். இதில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 585 வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த மார்ச் 6 ஆம் தேதி வரை வாக்குச்சாவடியின் எண்ணிக்கை 2,785 ஆக இருந்தது. தற்போது 2,789 வாக்குச்சாவடிகளாக மாறி உள்ளது. 4 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் வாக்கு சாவடி அமைப்பிடங்களின் எண்ணிக்கை 1, 233 ஆகும்.யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் வருகிற டிசம்பர் 11ஆம் தேதி வரை புகார் மனு தாக்கல் செய்யலாம் ஆச்சரிய பணிகளை தீர்வு செய்யும் காலம் டிசம்பர் 28ஆம் தேதி ஆகும்.
மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர்கள் தங்கள் பெயர் சேர்த்தல் திருத்தல் மற்றும் நீக்கலுக்கான படிவம் 6 மற்றும் படிவம் 7 மற்றும் படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்கு சாவடி நிலை அவர்களிடம் அளித்து விடலாம்.இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 2027ம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி வெளியிடப்படும்
இவ்வாறு கலெக்டர் பிரத்திக் தயாள் கூறினார்.
பேட்டியின் போது மாநகராட்சி கமிஷனர் பொன்மணி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

