Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தனிஷ்க் நகைக் கடையில் கற்கள் பதிக்காத நகைகளாக தேர்ந்தெடுத்து 35 கிலோ தங்க நகைகளை ஒரே ஆளாக வந்த கொள்ளையடித்த நபர்.

0

'- Advertisement -

மதுரை தனிஷ்க் நகைக் கடையில் 35 கிலோ தங்க நகைகளை ஒரே ஆளாக வந்த நபர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Ad banner

மேலும் கற்கள் பதித்த நகைகளை விற்றால் கற்களின் கழிவுகள் போக பணம் குறைவாக கிடைக்கும் என்பதால் கற்கள் பதிக்காத நகைகளை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளார் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

 

இதுகுறித்து போலீஸார் கூறியிருப்பதாவது:

மதுரை தனிஷ்க் நகைக் கடையில் தரைதளத்தில் நகைகள் இருந்ததால் அங்கு சென்ற கொள்ளையன் நகைகளை அள்ளி சாக்கு பையில் போட்டுள்ளார். ஒரு மணி நேரமாக நிறுத்தி நிதானமாக நகைகளை கொள்ளையடித்துள்ளார்.

 

அதிலும் ஒரே ஆளாக வந்துள்ளார். கற்கள் பதித்த நகைகளாக இருந்தால் விற்பனை செய்தால் பணம் குறைவாக கிடைக்கும் என்பதால் கற்கள் பதிக்காத நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். இந்த கொள்ளையனை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

இரும்பு சாரத்தில் ஏறி மொட்டை மாடி ஜன்னல் வழியாக வந்த கொள்ளையன், லிப்ட்டை தாங்கும் இரும்பு கம்பிகளை பிடித்துக் கொண்டு கடையின் தரைதளத்திற்கு வந்தார். அங்கிருந்த நகைகளை அள்ளிக் கொண்டு நேதாஜி மெயின் ரோடு வழயாக சென்றுவிட்டார்.

 

கடையின் 2ஆவது தளம் காலியாக உள்ளது. 3ஆவது தளத்தில் நகைகளை பாதுகாக்கும் பெட்டகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறதாம். இவ்வாறு போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையன் உடல் முழுவதும் கருப்புத் துணி, முகமூடி, கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு கொள்ளையடித்துள்ளார்.

இன்று காவல்துறையினர் 15 கிலோ நகைகள் மட்டுமே திருட்டு போய் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.