Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆர் எஸ் எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் இடிமுரசு இஸ்மாயில் அறிக்கை…..

0

'- Advertisement -

ஆர் எஸ் எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் இடிமுரசு இஸ்மாயில் அறிக்கை…..

Ad banner

அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:

தமிழ்நாட்டில் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்தகாவல்துறையினரிடம் அனுமதி கோரிய நிலையில் காவல்துறை 58 இடங்களில் அனுமதி மறுக்கிறது என்று நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.வட மாவட்டங்களில் அக்டோபர் 25 ஆம் தேதி தென் மாவட்டங்களில் நவம்பர் 1 ஆம் தேதியும் ஊர்வலம் நடத்த ஆர் எஸ் எஸ் சார்பாக முடிவெடுத்துள்ளனர் என்று செய்தித்தாள்களில் வந்துள்ளது.நீதிமன்றத்தில் நீதிபதி அவர்கள் தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் எத்தனை பேர் ஊர்வலத்தை எதிர்த்துள்ளனர் என்று கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தங்களுடைய சகோதர சமுதாயத்தவர்கள் ஆன இந்து பெருங்குடி மக்களிடம் பாசமாகவும் நேசமாகவும் மாமன்களாகவும் மச்சான்களாகவும் அன்பையும் நட்பையும் எப்போதும் கடைப்பிடித்து வாழ்ந்து வருகிறார்கள்.தீபாவளி பண்டிகைக்கு செய்கின்ற பலகாரங்களை இஸ்லாமிய மக்களுக்கு வழங்கி அந்த பலகாரங்களை இஸ்லாமிய மக்கள் சாப்பிடுவதும் அதுபோலவே ரம்ஜான் பக்ரீத் பண்டிகைகளின் போது முஸ்லிம்கள் வீட்டில் சமைக்கின்ற பிரியாணியை இந்து பெருங்குடி மக்களுக்கு வழங்கி அந்த பிரியாணியை இந்து மக்கள் அன்போடு சாப்பிடக்கூடிய நிகழ்வுகள் காலம் காலமாக நடந்து வருகிறது.அதுபோலவே பிள்ளையார் ஊர்வலம் நடைபெறும் போதும்,பல ஆயிரம் பேர் கூடும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஸ்ரீரங்கம் கோயில் போன்ற விழாக்களிலும் மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெறுகின்ற இந்து மத கோயில் விழாக்களிலும் முஸ்லிம்கள் எந்த எதிர்ப்பையும் எப்போதும் தெரிவித்ததில்லை. கடந்த காலங்களில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் பிள்ளையார் ஊர்வலம் செல்லும் போது அமைதியான முறையில் பள்ளிவாசலின் உள்ளே தொழுகின்ற இஸ்லாமிய மக்களின் தொழுகைக்கு இடையூறாக மேளதாளங்களை வேண்டுமென்றே இந்து முன்னணியினர் அடிக்கும் போது தான் தகராறு நடைபெற்று கலவரங்கள் ஏற்பட்டது.அத்தகைய பிரச்சினைகளில் தமிழ்நாடு அரசும் காவல்துறையினரும் தனி கவனம் செலுத்தி பாகுபாடு இல்லாமல் நீதி நெறிப்படி நடவடிக்கை எடுத்ததால் தான் தற்போது நடைபெறுகின்ற பிள்ளையார் ஊர்வலங்களில் கலவரங்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதில்லை.

இந்திய நாட்டிலேயே தமிழ்நாடு என்றும் மத நல்லிணக்கமிக்க மாநிலமாக தொடர்ந்து இருந்து வருகிறது அந்த வகையில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சியிலும் மத நல்லிணக்க மாநிலமாக தொடர்வதற்கு தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதை முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் பாராட்டி வரவேற்கிறேன்- எனவே ஆர் எஸ் எஸ் நடத்துகின்ற பேரணிக்கு காவல் துறை கடும் நிபந்தனைகளை விதித்து அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தை அமளிக்காடாக மாற்ற நினைப்பவர்களை தடுத்து நிறுத்தி முறையான பாதுகாப்பை வழங்கி ஆர் எஸ் எஸ் பேரணியை தமிழகத்தில் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டுமாறு முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் காவல்துறையினரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொது செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.