திருச்சி டாஸ்மாக் எஸ் ஆர் எம்., டி.எம் . ஆகியோருக்கு மாதம் நீயா பணம் தருவ? 10269 கடை சூப்பர்வைசர் சேல்ஸ்மேன் திமிர் பேச்சு …சம்பளம் உயர்த்தினாலும் எந்த ஆட்சி வந்தாலும் எங்களுக்கு பாட்டுலுக்கு பத்து ரூபாய் தந்தே ஆக வேண்டும் ..
திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் (10269) பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் தருகிறேன் என கூறியும் பத்து ரூபாய் தந்தால் மட்டுமே தருவேன் என மிரட்டிய டாஸ்மாக் ஊழியர் ஜோன் .
இன்று மதியம் திருச்சி இராமகிருஷ்ணா பாலம் கீழ் உள்ள டாஸ்மாக் கடையில் நண்பர் ஒருவர் மதுபானங்கள் வாங்க சென்று உள்ளார்,பிளாக் பெரல் ஐந்து ஆப் வாங்க பணம் செலுத்திய போது பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் தந்தால் தான் சரக்கு தருவேன் இல்லையென்றால் தரமாட்டேன் என விற்பனையாளர் ஜோன் என்பவர் கூறியுள்ளார் .பாட்டுக்கு அஞ்சு ரூபாய் தரேன் எனக் கூறியும் அவர் கேட்கவில்லை இதற்கு கடை சூப்பர்வைசரும் பத்து ரூபாய் கொடுத்தால் கொடுங்கள் இல்லை என்றால் இடத்தை காலி செய்ய என ஆபாச வார்த்தைகளால் திட்டியும் உள்ளார் . ..ஏன் தற்போது தமிழக வெற்றி கழக ஆட்சியில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் பெறக்கூடாது என கூறிதான் சம்பளம் உயர்த்தி உள்ளார்கள் மீண்டும் நீங்கள் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவது ஏன் என கேட்டபோது நாங்கள் திருச்சி மாவட்ட டாஸ்மாக் எஸ் ஆர் எம் மற்றும் டி எம் ஆகியோருக்கு மாதந்தோறும் லஞ்சம் தருகிறோம் மேலும் இறக்கு கூலி எங்கள் செலவு இது எல்லாம் யார் தருவார் என தெனாவட்டாக பேசி உள்ளார்,ஆனால் டாஸ்மாக் எஸ்ஆர்எம், டி எம் ஆகியோர் எந்த பணமும் வாங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மது பிரியர் கூடுதலாக பத்து ரூபாய் கொடுத்து ஐந்து பாட்டில்கள் வாங்கி உள்ளார், (ஜி பேயில் அனுப்பிய ஆதாரம் இணைப்பு)
இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு மேலும் அவப்பெயர் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது

