திருச்சியில் ரூ110 கோடியில் புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை வருகிற 20 ம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர் .
திருச்சியில் ரூ110 கோடியில் புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை வருகிற 20 ஆம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர் ..
பிரம்மாண்ட ரோடு ஷோவுக்கு ஏற்பாடு .
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், வரும் 20 ஆம் தேதி திருச்சிக்கு வருகிறார். அன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் கிளம்பி காலை 10 மணிக்கு திருச்சி வரும் முதல்வர் விஜய் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஒரே நேரத் தில் 500 நோயாளிகள் சிறப்பு சிகிச்சை பெறும் வகையில் ரூ.110 கோடி செலவில் நவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை திறந்து வைக்கிறார். அங்கிருந்து அண்ணா விளை யாட்டரங்கம் அருகே உள்ள ஓட்டலுக்கு செல்லும் அவர் அங்கு பல கோடி ரூபாய்
மதிப்பில் நலத் திட்டங்களை தொடங்கி வைத்து 100 பேருக்கு நலத் திட்ட உதவி களை வழங்குகிறார்.
இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர் மதியம் விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை கிளம்பி செல்கிறார்.
முதலமைச்சர் விஜய் வருகையே முன்னிட்டு, நேற்று முன்தினம்
நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் திருச்சி வருகை புரிந்து கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது முதல்வர், விமான நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை ரோடுஷோ நடத்த ஏற்பாடுகளை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதுகாப்பு பணி குறித்து போலீசார் ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகையை முன்னிட்டு திருச்சி த.வெ.க.நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

