திருச்சியில் சிறு வரி செலுத்துவோர் வெளிநாட்டு சொத்துக்கள் வெளிப்படுத்தல் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சியில் சிறு வரி செலுத்துவோர் வெளிநாட்டு சொத்துக்கள் வெளிப்படுத்தல் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
வருமான வரி மதுரை கூடுதல் இயக்குநர் பங்கேற்பு
திருச்சி வருமான வரித்துறை உதவி இயக்குநர் (புலனாய்வு) அலுவலகம் சார்பில், சிறு வரி செலுத்துவோருக்கான வெளிநாட்டுச் சொத்துகள் குறித்த வெளிப்படுத்தல் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி வருமான வரி அலுவலக அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் ஏராளமான பட்டயக் கணக்காளர்கள், வரி வல்லுநர்கள், வரி செலுத்துவோர் கலந்துகொண்டனர்.
சிறிய அளவில் வரி செலுத்துவோருக்கான ஒருமுறை தன்னார்வமாக வெளிப்படுத்தல் திட்டமான குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் ஆக.16 ஆம் தேதி முதல் டிச31 ஆம் தேதி வரை விண்ணப்பிப்பிக்க அவகாசம் உள்ளது.
மதுரை வருமான வரி கூடுதல் இயக்குநர் (புலனாய்வு) பி.ஸ்ரீதரன் பேசும் போது –
வெளிநாடுகளில் உள்ள வருமானம் மற்றும் சொத்துகளைத் தாமாக முன்வந்து வெளிப்படுத்தவும், அவற்றை முறைப்படுத்தவும் சிறு வரி செலுத்துவோருக்கு இந்தத் திட்டம் ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது.
வெளிப்படுத்தப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் வெளிநாட்டுச் சொத்துகளைக் கொண்ட வரி செலுத்துவோர், அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி வரை இருக்கும் பட்சத்தில், இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு 30 சதவீதம் வரி மற்றும் அந்த வரியின் அளவில் 100 சதவீதம் கூடுதல் தொகை (அதாவது, சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் மொத்தம் 60 சதவீதம்) செலுத்த வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் திருச்சி வருமான வரி 1வது சரக கூடுதல் ஆணையர் ஆர்.ராஜராஜேஸ்வரி, திருச்சி 1 வது வட்டம் வருமான வரித் துணை ஆணையர் டி.சுவேதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உதவி இயக்குநர் (புலனாய்வு) எல்.ராஜசேகர் வரவேற்றார். திருச்சி மத்திய வட்ட துணை இயக்குநர் எஸ்.சீனிவாசன் நன்றி கூறினார்.

