திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக ஆவின் கார்த்திகேயன் நியமனம் .
திருச்சி மாவட்ட ஆவின் (Trichy District Cooperative Milk Producers Union) பெருந்தலைவராக சி. கார்த்திகேயன் 2018-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக அறியப்பட்டு, திருச்சி அரசியலில் முக்கியப் பங்காற்றினார். திருச்சி, அரியலூர்,

பெரம்பலூர் , கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆவின் பெருந்தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார் . அ.தி.மு.க. மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளராகவும், பின்னர் ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியவர்.தற்போது வரை அதிமுகவில் தீவிர பணியாற்றி வருபவர். தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மீது தொகுதி வேட்பாளர் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வெற்றிக்காக பணியாற்றியவர்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் அனைவரிடமும் அன்புடன் பழகக் கூடியவர்.
இவரை திருச்சி மாநகர மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளது திருச்சி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

