Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

துறையூர் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் தற்கொலை.

0

'- Advertisement -

Ad banner

துறையூர் அருகே  மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் விஷம் குடித்து தற்கொலை..

திருச்சி துறையூர் சிக்கம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 71). இவரது மனைவி கண்ணம்மாள்.

இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார்.

மனைவி மீது அளவற்ற பாசம் வைத்திருந்த பாபுராஜால் மனைவி பிரிவை தாங்கிக் கொள்ள இயலவில்லை.

பின்னர் கவலையில் அவரது உடல் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

பின்னர் டிசார்ஜ் செய்யப்பட்டு பாபுராஜ் தனது வீட்டில் இருந்தார். இந்த நிலையில் வீட்டில் அவர் திடீரென மயங்கி விழுந்தார்.மீண்டும் உறவினர்கள் அவரை மீட்டு அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பாபுராஜ் விஷம் குடித்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர் …பின்னர் மேல் சிகிச்சைக்காக இருங்கலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் பாபுராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த அவரது மகன் சரவணக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் துறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.