Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கலைஞரின் 8ம் ஆண்டு நினைவு நாள் .அமைதி பேரணியில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி மாவட்ட செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு .

0

'- Advertisement -

Ad banner

திருச்சி தெற்கு மாவட்டத்தில் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணியில் அனைவரும் திரளாக பங்கேற்கமாவட்ட செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு .

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, வருகின்ற ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.30 மணிக்கு அண்ணா ஸ்டேடியம் ரவுண்டானா முதல் டி.வி.எஸ். டோல்கேட் வரை அமைதி பேரணியாக சென்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்த உள்ளோம் . அதனை தொடர்ந்து திருவெறும்பூர் தொகுதி காட்டூரில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவிக்க உள்ளோம் .

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை, கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன் என முன்னாள் அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.