Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எஸ் ஆர் எம் யூ திருச்சி கோட்ட செயற்குழு கூட்டத்தில் ஆட்குறைப்பு, தனியார் மயம் ஆகியவற்றை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் …

0

'- Advertisement -

Ad banner

ரயில்வேயில் 2 லட்சம் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் ஆட்குறைப்பு, தனியார் மயம் ஆகியவற்றை கைவிட வேண்டும்  எஸ்.ஆர்.எம் யு திருச்சி கோட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் .

எஸ்.ஆர். எம்.யு. திருச்சி கோட்ட செயற்குழு கூட்டம் இன்று திருச்சிமத்திய பெண்கள் அருகிலுள்ள ரயில்வே சொசைட்டி மண்டபத்தில் நடைபெற்றது.

கோட்டத் தலைவர் ஆர்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

கோட்டச், செயலாளர் எஸ்.வீரசேகரன் முன்னிலை வைத்து சிறப்புரையாற்றினார் .

இந்த செயற்குழுக் கூட்டத்தில், கிரண் குமார், என். வெங்கடேஷ் குமார், பி. வேலு, டி. செல்வகுமார், என். வாசுகுமார், சி. நரேஷ் குமார், கே. கணேஷ்குமார், எம். பிரசன்னா, எஸ். மணிகண்டன், கே. தயாநிதி, பிரபாகரன், எஸ்.சுதாகர் ஆகியோர் உரையாற்றினார்கள்.

கூட்டத்தில் 8ஆவது ஊதிய குழு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்,

1.1.2026 முதல் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்,நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருக்கும் சுமார் 2 லட்சம் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் .

ஆட்குறைப்பு, தனியார் மயம் ஆகியவற்றை கைவிட வேண்டும். சி.ஆர்.சி. பதவி மறுசீரமைப்பை அனைத்து கேட்டகரிகளுக்கும் 2023 ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டும்,

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் திருச்சி கோட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட எஸ் ஆர் எம் யூ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் கிரண் குமார் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.