Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர் பகுதியில் 5 டூவீலர்கள் . திருட்டு 2 பேர் கைது.

0

'- Advertisement -

திருச்சி மாநகர் பகுதியில் 5 டூவீலர்கள் . திருட்டு 2 பேர் கைது.

Ad banner

திருச்சி செம்பட்டு கீழபுது தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 45). இவர் சிமெண்ட் குடோனில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி இவர் தனது மோட்டார் சைக்கிளை விமான நிலையம் திருவளர்ச்சிபட்டி பகுதியில் உள்ள மணமகிழ் மன்றம் முன்பு நிறுத்தி உள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் விமான நிலைய காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த பேரில் ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த திருட்டில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 26) , திருச்சி செம்பட்டு பகுதியை சேர்ந்த இமானுவேல் (வயது 22 ) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல் சென்னை பொன்னேரியை சேர்ந்தவர் ஹர்ஷா (வயது 23.) இவர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ந்தேதி இவர் தனது இருசக்கர வாகனத்தை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு வகுப்பிற்கு சென்றுள்ளார் பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இது குறித்த அவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கோட்டை, பாலக்கரை, உறையூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த நவனீத் (32 ) , ஷாருக்கான் (26), சதீஷ்குமார் 38 ஆகியோரின் இருசக்கர வாகனங்களும் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.