இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தை கண்டித்து, தலைமைச் செயலகம் முன்பு கழுதை காதில் சங்கு ஊதும் நூதன போராட்டம்.இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி அறிவிப்பு.
இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) நிர்வாகத்தை கண்டித்து, தலைமைச் செயலகம் முன்பு கழுதை காதில் சங்கு ஊதும் நூதன போராட்டம் என அறிவித்துள்ளார்.
இந்து திருக்கோயில் மீட்பு இயக்க கோரிக்கைகள்:
1. திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருக்கோவிலுக்கு சொந்தமான சுமார் ₹700 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டு, கோவிலின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க!
2. திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவிலில், கடந்த 36 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க!
3.தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்குச் சொந்தமான சுமார் ₹100 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள சொத்துகளை மீட்டு, கோவிலின் வசம் ஒப்படைக்க!
4.திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலுக்குச் சொந்தமான வணிக வளாகங்களில் நிலுவையில் உள்ள சுமார் ₹1.5 கோடி வாடகை பாக்கியை உடனடியாக வசூலிக்க! மேலும், வாடகையை வசூலிக்கத் தவறிய செயல் அலுவலர் (EO) மீது உரிய நடவடிக்கை எடுக்க!
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் தலைமைச் செயலகம் முன் கழுதை காதில் சங்கு ஊதும் போராட்டம் அறிவித்துள்ளார்.

