Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .

0

'- Advertisement -

திருச்சி மாநகர பகுதிகளில் நாளை 14.5.2026 வியாழக்கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .

Ad banner

இது குறித்து திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகர், ஜே.கே. நகர், செம்பட்டு, காஜா மலை, ரெங்காநகர், சுப்ரமணியநகர், வி.என். நகர், தென்றல் நகர், கவிபாரதிநகர், காமராஜ் நகர், கிராப்பட்டி, அன்புநகர், எடமலைப்பட்டிபுதூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல்நகர் இ.பி.காலனி.

அரியமங்கலம் கிராமம், மலையப்பநகர், ரெயில்நகர், முன்னாள் ராணுவத்தினர் காலனி, மேலகல்கண்டார்கோட்டை, நாகம்மைவீதி, பொன்னேரிபுரம், அம்பேத்கார் நகர், விவேகானந்தர் நகர், எல்.ஐ.சி.காலனி புதியது, விஸ் வநாதபுரம் கே.சாத்தனூர், தென்றல் நகர், ஆனந்நகர், சுப்ரமணிய நகர், சத்தியவாணி கே.கே.நகர், அம்மா மண்டபம், பாலாஜி அவென்யூ, தேவி பள்ளி, மேலூர், பெரியார் நகர், திருவானைக்காவல், தேவ தானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் விநியோகம் நாளை (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் இருக்காது என்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் குடிநீர் வினியோகம் இருக்கும்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.