Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தவெக ஆட்சிக்கு வந்தது முதல் வார்டுகளில் எந்தப் பணியும் நடக்கவில்லை ஆனால் எப்பொழுது வந்தாலும் கமிஷனர் மீட்டிங்கில் இருக்கிறார் என்கிறார்கள்… அப்படி மீட்டிங்கில் என்ன பேசினீர்கள் என நேரடியாக திருச்சி மாநகராட்சி ஆணையரை கேட்ட அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி..

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சியில் நேற்று சாதாரண மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் ஆணையர் வீர் பிரதாப் சிங், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.மாமன்ற உறுப்பினர்கள், துணை ஆணையர்கள், நகர பொறியாளர்கள், நகர அலுவலர், செயற் பொறியாளர்கள் , மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செய்ற் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Ad banner

பின்னர் நடைபெற்ற விவாதத்தின் போது அதிமுக மாமன்ற உறுப்பினர் கோ. கு. அம்பிகாபதி மாநகராட்சி ஆணையர் பார்த்து உங்களிடம் நேரடியாக கேட்கிறேன்

மாநகராட்சி ஆணையரை பலமுறை பார்க்க முயற்சித்தும் பார்க்க முடியவில்லை ஏன் ?நான் உங்களை பல முறை பார்க்க வந்த போதும் கமிஷனர் மீட்டிங்கில் இருக்கிறார் என கூறுகிறார்கள் நீங்கள் ஆணையராக பொறுப்பேற்ற பின்பு திருச்சி மாநகராட்சியில் இதுவரை எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை பின் நீங்கள் அதிகாரிகளிடம் என்ன பேசுனீர்கள் என்றதுக்கு அதற்கு நான் உங்களிடம் பதில் கூற தேவையில்லை என கூறினார் ஆணையர் . மக்கள் பிரதிநிதியான கவுன்சிலர்களை கூட சந்திக்க முடியாத பணி என்ன? அடிக்கடி செயற்பொறியாளர்களை மாற்றுவது ஏன்? இது லஞ்சம் வாங்காத அரசு என்று பெருமைப்பட கூறுகிறார்கள் ஆனால் மாநகராட்சி ஏ இ இ செந்தில் பாஸ்கர் தினமும் ஒரு லட்சம் இல்லாமல் வீட்டிற்கு செல்வதில்லை என செய்தி வருகிறது, அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று பத்திரிகைகளில் தினந்தோறும் செய்து வருகிறது ஆனால் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை . . . மக்கள் பிரதிநிதியாக நாங்கள் ஆணையரை எப்போது பார்க்க வந்தாலும் கூட்டம் நடக்கிறது கூட்டம் நடக்கிறது என்றே சொல்கிறார்கள்.பின்னர் எப்படி மக்கள் பிரச்சனைகளை ஆணையரிடம் எடுத்துரைக்க முடியும்

ஆணையர் விர் பிரதாப் சிங் :

 

மக்கள் குறைதீர்க்கும் நாளில் 700 மக்களை நான் சந்திக்கிறேன் நானும் மக்கள் பணி தான் செய்கிறேன் ஆய்வுக்கூட்டம் நடக்கும்போது மட்டும்தான் பார்க்க முடிவதில்லை மற்ற நேரங்களில் அனைவரையும் சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன் ..

 

அம்பிகாபதி:-

 

உங்களை சந்திக்க வரும் நபர்களிடம் மனுவை வாங்கி வைத்து அனுப்பி விட்டால் போதும் ,ஆனால் நாங்கள் தினந்தோறும் எங்கள் வார்டில் உள்ள 10,000 மேற்பட்ட பொதுமக்களை சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூற வேண்டிய நிலையில் இருக்கின்றோம்,ஏர்போர்ட் சாலையில் மின்விளக்குகள் இல்லை இதனால் அங்கு விபத்து மற்றும் திருட்டுகள் நடக்க வாய்ப்புள்ளது இதை யாரிடம் கூற வேண்டும் ?சிறிய செலவுகளை தீர்மானம் வைக்காமல் பணி செய்யலாம் என கூறுகிறீர்கள் ஆனால் இதுவரை ஏன் எந்த பணியும் செய்யவில்லை,

எனது 65 ஆவது வார்டில் மாநகராட்சி பணிகள் செய்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிறது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை அதிமுக கவுன்சிலர்கள் வார்டை புறக்கணிக்க கூறி மேல் இடத்தில் உங்களுக்கு உத்தரவு வந்து உள்ளதா என காரசாரமாக வாக்குவாதம் நடந்த போது மாநகராட்சி ஆணையர் தெனாவட்டாக அமர்ந்து இருந்ததை கண்டித்து அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி கூட்டத்தின் பாதிலேயே மாமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.