Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சியில் துப்புரவு பணிக்கு பணியாளர்கள் இல்லை ஆனால் போஸ்டர்களை கிழிக்க ஏது பணியாளர்கள் ?முதல்வர் விஜய் படம் உள்ள பிளக்ஸ்களை அகற்ற மட்டும் பயமா? மலைக்கோட்டை தெப்பக்குளம் பணி கிடப்பில் போட்டது ஏன்? அதிரடியாக கேட்ட அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் . வாயை மூடி அமர்ந்திருந்த அதிகாரிகள் .

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சியில் நேற்று மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது …

Ad banner

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் பேசுகையில் திருச்சி மாநகராட்சியில்துப்புரவு பணியாளர்கள் ஏற்கனவே பற்றாக்குறை உள்ளது ..தூய்மை பணியாளர்களின் பணி பொதுமக்களில் சுகாதாரத்துக்காக நியமிக்கப்பட்டவர்கள் … வார்டுகளில் பணிபுரிய போதிய பணியாளர்கள் இல்லை என அதிகாரிகள் கூறும் நிலையில் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சுவற்றுகளில் ஒட்டி இருக்கும் போஸ்டர்களை கிழிக்க துப்புரவு பணியாளர்களை நியமித்தது யார் ?எதன் அடிப்படையில் போஸ்டர்களை கிழிக்கீர் …மாநகராட்சி அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக என்றால் அதே சுவற்றில் ஒட்டப்பட்டு இருக்கும் பிளக்ஸ்களை கிழிக்காதது ஏன்?சுவற்றில் எழுதி இருக்கும் விளம்பரங்களை அழிக்காதது ஏன் ?இதற்கு எதற்கும் மாநகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் யாரும் எதுவும் பதில் சொல்லாமல் வாயை மூடி அமர்ந்திருந்தனர் .. மற்ற கட்சி காரர்கள் மற்றும் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு வைக்கப்படும் பிளஸ்கள் ஒரு இரு நாட்களில் அகற்றப்பட்டு விடுகிறது …ஆனால் தமிழக வெற்றி கழகம் சார்பில் குறிப்பாக திருச்சி ஐயப்பன் கோவில் அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் வைத்துள்ள பிளக்ஸ் பேனர்கள் பல மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளது ஏன் அதில் விஜய் படம் உள்ளதால் நீங்கள் (அதிகாரிகள் ) பயப்படுறீங்களா?

எனது வார்டுக்கு உட்பட்டது திருச்சியின் அடையாளம் மலைக்கோட்டை . ஆனால் மலைக்கோட்டை தெப்பக்குளத்தை மாரிஸ் மேம்பாலம் போன்று பாதி பணியில் கிடப்பில் போட்டது யார் ?மலைக்கோட்டை தாயுமானசாமி கோயிலில் தெப்பக்குளத்தை ஏன் அவ மரியாதை செய்கிறீர்கள்?இது இந்துக்களின் மனதை புண்படுத்துவது போல் உள்ளது …தெப்பக்குளத்தில் சாக்கடை தண்ணி தான் தற்போது தேங்கியுள்ளது ..தெப்பக்குளம் தூர்வாரும் பணியை முதலில் தனியார் ஒப்பந்தம் கொடுத்ததாக கூறினீர்கள்,பின்னர் வியாபாரிகள் சங்க சார்பில் செய்வதாக கூறினீர்கள் தற்போது மாநகராட்சியினர் செய்வதாக கூறி உள்ளீர்கள் .. தெப்பக்குளம் தூர்வாரும் பணியில் என்னதான் நடக்கிறது ஏன் அதிகாரிகள் மாற்றி மாற்றி பேசுகிறீர்கள்? என அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் கேட்ட எந்த கேள்விக்கும் மாநகராட்சி கமிஷனர் வீர் பிரதாப்சிங் மற்றும் அதிகாரிகளால் பதில் கூற முடியாமல் அமைதியாக அமர்ந்து இருந்தனர் ….

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.