Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஏர்போர்ட் அருகே உழைக்காமல் லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம் என எண்ணி ரூ .2 லட்சம் ஏமாந்த நபர்

0

'- Advertisement -

திருச்சி, ஏர்போர்ட் வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மலர்மன்னன் (வயது: 42). இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது .அதில், 5ஜி டவர் அமைப்பது தொடர்பான விளம்பரம் மற்றும் செல்போன் நம்பர் இருந்தது. உடனே, அவர் அந்த மொபைல் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது எதிர்முனையில் பேசியவர், ‘செல்போன் டவர் அமைக்க உங்களிடம் நிலம் உள்ளதா?’ எனக் கேட்டுள்ளார்.

Ad banner

அதற்கு மலர்மன்னன், தனது மனைவி பெயரில் நிலம் திருச்சியில் உள்ளது எனத் தெரிவித்து உள்ளார். உடனே, அந்த மர்ம நபர் நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி விவரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார் .

.பின்னர், ‘செல்போன் நிறுவனம் மூலமாக ரூ. 15 லட்சம் முன்பணமாகச் செலுத்த இருக்கிறோம். அதற்கு ஆவண கட்டணமாக ரூ. 2 லட்சம் செலுத்த வேண்டும்’ எனக் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய மலர்மன்னன் அந்த மர்ம நபர் கொடுத்த வங்கிக் கணக்குக்குக் கடந்த ஜூன் 24-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.2 லட்சத்தை அனுப்பினாா். ஆனால், அதன் பிறகும் அந்த மா்ம நபா் மேலும் பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்த போது தான் இவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி சைபா் குற்றப் பிரிவில் இணையதளம் வழியாக மலா்மன்னன் அளித்த புகாரின் பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.