ஆளுங்கட்சியான தவெகவில் இருந்து விலகி தாய் கழகத்தில் இணைந்த அதிமுக பிரமுகர் . திருவெறும்பூர் தொகுதி அதிமுகவில் அதிரடி நடவடிக்கை
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போராடி வெற்றி பெற்று ஆட்சி அமைந்துள்ளது.இதன் மாயை கண்டு சிலர் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து வந்தனர்.அங்கு சென்ற பின்பு பழைய கட்சி இருந்த மரியாதை இல்லை என்பதை உணர்ந்து தாய் கழகத்தில் இணைந்து வருகின்றனர் ….
தற்போது திருச்சி திருவெறும்பூர் அதிமுக 39 வது வட்ட செயலாளராக யோகானந்தம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து அங்கு மரியாதை இல்லை என்பதை உணர்ந்து தவித்து வந்தார் இதனை அறிந்த அதிமுக திருவெறும்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் உடனடியாக யோகானந்தை அழைத்து பேசினார் …
இதனைத் தொடர்ந்து இன்று யோகானந்தம் அதிமுக திருவெறும்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.என். சிவகுமார் முன்னிலையில் இன்று தாய்க்கழகமான அதிமுகவில் இணைந்து உள்ளார் .இந்த நிகழ்வின்போது திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்
எஸ். கே.டி. கார்த்தி,மண்டல குழு தலைவர் சுரேஷ் குமார், பொதுக்குழு உறுப்பினர் பொய்கைகுடி முருகா, ஒன்றியஅவைத்தலைவர்அண்ணாதுரை, வட்ட செயலாளர் தெய்வ மணிகண்டன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இதன்பின் திருவெறும்பூர் தொகுதி சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியபோது ;-எங்கள் கட்சியில் இருந்து ஒரு சிலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து இருந்தனர் . தற்போது அது தவறு என்பதை உணர்ந்து உள்ளனர்.எனவே விரைவில் மாற்றுக் கட்சிகளுக்கு சென்ற அனைவரும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து செயல்படுவது உறுதி என தெரிவித்தார் …

