திருச்சி அரியமங்கலத்தில் கொத்தனாரின் செல்போன் திருடியவர் கைது.ஒருவருக்கு வலை ..
தஞ்சாவூர் மாவட்டம் நடுவூர் செல்லாங்கரை பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 53.) கொத்தனாரான இவர் அரியமங்கலம் பகுதியில் புதிய கட்டிடம் கட்டும் பணியை முடித்துவிட்டு இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருவெறும்பூர் பகுதி சேர்ந்த ராமு (வயது 22,) காட்டூர் பகுதியை சேர்ந்த சையது ஆகிய இருவரும் சாமிநாதனின் செல்போனை திருடி சென்று விட்டனர்எனக் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் காவல் நிலையம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ராமுவை கைது செய்தனர். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்ட சையதை அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

