Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்ட அளவிலான மகளிர் செஸ் போட்டி .

0

'- Advertisement -

சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்ட அளவிலான மகளிர் செஸ் போட்டி .

 

Ad banner

இன்று புதன்கிழமை (07.10.2026 ) காலை 10.30 மணியளவில் மாவட்ட அளவிலான மகளிர் செஸ் போட்டி, திருச்சி மாவட்ட செஸ் சங்கத்துடன் இணைந்து சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

 

இப்போட்டியில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8, 10, 13, 18, 18 வயது மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது செஸ் திறமையை வெளிப்படுத்தினர். பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன.

 

போட்டியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா மாலை 5 மணிக்கு கல்லூரியின் மாணிக்க விநாயகம் அரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் சுதாமதி வரவேற்றார்

விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.வி. அல்லி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்ததுடன் மேலும், உருமு தனலட்சுமி குழும கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மேஜர் டாக்டர் என்.எஸ். சிவகுமார், திருச்சி மாவட்ட செஸ் சங்க செயலாளர் தினகரன், திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் சி.ரவிசங்கர்,மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.

மாணவிகளின் அறிவுத்திறன், சிந்தனைத்திறன் மற்றும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.