தமிழகத்தின் துணை முதல்வர் புஸ்ஸி ஆனந்த் வாழ்க கோஷம்…சிரித்துக் கொண்டே ஏற்றுக்கொண்ட ஆனந்த்
திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்க மாநாடு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்றிரவு நடைபெற்றது .
இதில், பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று மாலை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது, அங்கிருந்த தொண்டர் ஒருவர் திடீரென ‘துணை முதல்வர் புஸ்லி ஆனந்த் வாழ்க’ என ஆனந்த் ஆனந்த்தை நோக்கி கூச்சலிட்டார்.
தொடர்ந்து, அந்த நபர் ‘துணை முதல்வர் எங்கள் அண்ணன் வாழ்க’ எனக்கூறினார். இதை கவனித்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், சிரித்து கொண்டேஅந்தக் கூவலை ஏற்றுக் கொண்டார். (எனவே துணை முதல்வர் பதவியை எதிர்பார்த்து இருப்பார் போல் உள்ளது) அங்கிருந்து காரில் மணப்பாறைக்கு புறப்பட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

