திருச்சி பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமான பொருட்களை திருடிய வாலிபர் கைது ; ஒருவருக்கு வலை
திருச்சி பஞ்சப்பூரில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய மார்க்கெட் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன இதில் திட்ட மேலாளராக புதுக்கோட்டை மாஞ்சான் விடுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 33) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அங்கு கட்டுமான பணிக்காக இறக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ எடை கொண்ட இரும்பு ராடுகளை வாசு மற்றும் கீழப்பஞ்சபூர் கிழக்குத் தெரு காலனி பகுதியைச் சேர்ந்த மணிவேல் (வயது 29) ஆகிய இரண்டு பேர் திருடி சென்று விட்டனர் என கூறப்படுகிறது.பின்னர்
இது குறித்து அருண்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் மணிவேலை எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமலை வான வாசுவை எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

