நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு கருத்துகளை கூற குற்றவியல் வழக்கறிஞர் செயலாளர் வெங்கட் அழைப்பு.
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாளை (24/8/2026) திங்கட்கிழமை அன்று திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் மாவட்ட சட்டப்பணி ஆனைக்குழு செயலாளர் நீதிபதி பிரபு அவர்களின் அழைப்பிதழில் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கம், குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் நிர்வாகிகள் ஏற்பாட்டில் வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் குறை கேட்கும் கூட்டம் மற்றும் 12/9/2026 அன்று நடக்கவிருக்கும் லோக் அதாலத் சிறப்பாக நடத்துவது குறித்தும் புதிய நீதிமன்ற வளாகம், நான்காவது மாடியில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
ஆகையால் கூட்டத்தை சிறப்பித்து தருமாறு மரியாதைக்குரிய மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு நீதிமன்ற நிர்வாகத்தில் ஏதாவது குறை இருந்தால் கூறியும்,லோக் அதாலத் சிறப்பாக நடத்துவது குறித்தும் கருத்து தெரிவிக்குமாறு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கம் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

