Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் . மருந்துக்கள், அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசம்.

0

'- Advertisement -

ஜோசப் கண் மருத்துவமனை திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் செயின்ட் மேரீஸ் நர்ஸரி & பிரைமரி ஸ்கூல் இணைந்து நடத்தும்மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை 7.05.2026 வியாழக்கிழமைகாலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை பொன்மலைப்பட்டி

Ad banner

செயின்ட் மேரிஸ் பள்ளியில் நடைபெற உள்ளது

( கண்ணில் சீழ் வடிதல், சதை வளர்ச்சி, கண்ணிர் நீர் அழுத்தம்

+தூரப்பார்வை குறைவு, பார்வை மங்கல், கண்புரை நோய்

கிட்டப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், தலைவலி)

மேலும் அளிக்கப்படும் இலவச சிறப்பு சிகிச்சைகள் விவரம் ……..

* கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும்.

* கண்புரை அறுவை சிகிச்சைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் முகாம் நாளன்றே திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செலல்லப்படுவார்கள். எனவே தயார் நிலையில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

* மருத்துவமனைக்குச் சென்றுவர போக்குவரத்து வசதி, உணவு. இருப்பிடம், ஸ்கேன் பரிசோதனை, மருந்துகள் இலவசம்.

* அறுவை சிகிச்சைக்குப் பிறகு மறுநாளே வீட்டிற்கு வந்துவிடலாம்.

* வயதானவர்கள் தங்களுடன் ஒருவரை முகாம் நடத்தும் இடத்திற்கு அழைத்து வரவும்.

* 1.0.1. லென்சுடன் கூடிய கண்புரை அறுவை சிகிக்சை திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாகச் செய்யப்படுகிற. பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

* அறுவை சிகிச்சைக்கென முகாமிற்கு வரும் நோயாளிகள் இருதய நோய் இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், ஆஸ்துமா உள்ளவர்கள் முன்னரே மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று அவர்கள் தற்போது சாப்பிடும் மருந்து, மாத்திரைகளை கையோடு கொண்டு வரவும்.

* முகாமிற்கு வருபவர்கள் ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அட்டை கொண்டு வரவும். அனைவரும் வந்து பயன்பெறுவீர்!

தொடர்புக்கு: ஜோசப் கண் மருத்துவமனை- 0431-2460622

இந்த தகவலை செயின்ட் மேரிஸ் பள்ளி தாளாளர் எட்வின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.