Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஓயாமரி மின் மயானம் மூடப்படுகிறது. திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

0

'- Advertisement -

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி,வார்டு குழு அலுவலகம்-I, பிரிவு-III, வார்டு எண்:15-க்குட்பட்ட ஓயாமாரி இடுகாடு மயானத்தில் எரிவாயு தகன மேடை (2 எண்ணிக்கை) (LPG Gas Furnace) மூலம் சடலங்களை எரியூட்டும் இடம் உள்ளது. இந்த தகன மேடைகளில் பழுது ஏற்ப்பட்டுள்ளதால் அதனை மாற்றம் செய்யும் பணி நடைபெறவுள்ளது.

 

இதன் காரணமாக வருகின்ற 03.11.2025 முதல் 18.12.2025 வரை 45 நாட்களுக்கு பிரேத உடல்களை எரியூட்ட இயலாது என்பதால் ஓயாமாரி இடுகாடு மயானம் தற்காலிகமாக மூடப்படுக்கிறது என்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் அறிவித்துள்ளார்.

 

எனவே,அதற்கு பதிலாக அருகில் உள்ள வார்டு எண்:4-ல் திருவானைக்கோவில், அம்பேத்கார் நகர் மற்றும் வார்டு எண்:11-ல் உறையூர், கோணக்கரையில் செயல்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மையங்களை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என ஆணையர் தெரிவித்துள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.