திருச்சி அருகே உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் உடல் நலக்குறைவால் பெண் யானை இந்திரா உயிர் இழந்தது .
தற்போது அந்த யானையின் வயது 64..
திருச்சி எம் ஆர் பாளையத்தில் அமைந்துள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் இந்திரா என்ற பெண் யானை கடந்த ஆறு மாத காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தது.
கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழு அதற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்..
ஆயினும் சிகிச்சை பலனின்றி யானை இந்திரா இன்று
இறந்தது.
உடற்கூறாய்வுக்குப் பிறகு யானையின் மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டது..
பின்னர் இறந்த
யானை இந்திராவை யானைகள் மறுவாழ்வு முகாம் அருகே தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிகளின் படி புதைக்கப்பட்டது.

