திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம்.

எடமலைப்பட்டி புது காவல் நிலையம் போலீசார் விசாரணை
திருச்சி எடமலைப்பட்டி புதூர் வடக்கு மேட்டு தெருவை சேர்ந்தவர் தமிழரசன் இவரது மனைவி செல்வி (வயது 25) இவர்கள் இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சஞ்சீவ் (வயது 2) என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 28 ந்தேதி கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனைவி செல்வியிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு தமிழரசன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பிறகு நீண்ட நேரம் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது அறையில் மின்விசிறியில் சேலையில் செல்வி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு உள்ளார் இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த தமிழரசன் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வியின் தந்தை சண்முகம் என்பவர் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய போலீசார் இடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வி இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அவரது கணவன் தமிழரசனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன காரணத்தால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

