Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு எ.புதூர் நாடார் உறவின் முறை சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை.

0

'- Advertisement -

Ad banner

மறைந்த தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 125 ஆவது பிறந்தநாள் விழா இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு எடமலைப்பட்டி புதூர் நாடார் உறவின்முறை சங்கத்தின் தலைவர் சேகர் நாடார் தலைமையில் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சங்க செயலாளர் இசக்கி முத்து நாடார்,பொருளாளர் ராஜ் நாடார்,முத்துவேல் நாடார் மற்றும் திரளான நாடார் சொந்தங்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.