Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு திங்கட்கிழமை நன்றி சொல்ல வரும் முதலமைச்சர் விஜய்க்கு நிகராக மூவுலகத்திலும் யாரும் கிடையாது.திருச்சியில் கு.ப கிருஷ்ணன் பேட்டி

0

'- Advertisement -

கிழக்கு தொகுதி பொது மக்களுக்கு நன்றி சொல்ல முதலவர் விஜய் நாளை மறுநாள் திருச்சி வருகை.

Ad banner

ரோட் ஷோ நடத்தி பொதுமக்களிடம் சிறப்பு உரையாற்றுகிறார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக நாளை மறுநாள் ஜூன் 1ந் தேதி (திங்கள் கிழமை) திருச்சி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

தனி விமானத்தில் வருகை தரும் முதலமைச்சர் விஜய்

தனக்கான பிரத்தியேக வாகனத்தில் விமான நிலையத்திலிருந்து ஏறி புறப்பட்டு

திருச்சி – புதுக்கோட்டை சாலை, டிவிஎஸ் டோல்கேட் , பழைய பால்பண்ணை,திருச்சி – சென்னை பைபாஸ் சாலை, சஞ்சீவி நகர்  சத்திரம் பேருந்து நிலையம் வழியாக  திருச்சி ஜோசப் கல்லூரி மைதானத்திற்கு வந்தடைகிறார்.

பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் பொதுமக்கள் மத்தியில் நன்றி தெரிவித்து உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்வானது நாளை மறுநாள் ஜூன் 1ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.

இன்றைக்கு தமிழக முதலமைச்சருக்கு நிகராக மூவுலகத்திலும் யாரும் கிடையாது.  திருச்சி மக்களின் எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் விஜய் நிறைவேற்றுவார்.

இந்த நேரத்தில் தவெக தொண்டர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் விடுகிறேன் முதலமைச்சர் விஜய் வரும் வாகனத்தை யாரும் பின்தொடராதீர்கள். நீங்கள் நிற்கும் இடத்தில் உங்களை அவர் சந்திப்பார். இவ்வாறு கு.ப. கிருஷ்ணன் கூறினார்

1ந் தேதி முதலமைச்சர் விஜய் திருச்சி விமான நிலையத்திலிருந்து இருந்து ஜோசப் கல்லூரி வரை சுமார் 10 கிமீ தூரத்திற்கு சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள், தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்க உள்ளனர். இதனை ரோடு ஷோ போல நடத்த தவெகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

பேட்டியின் போது துணை சபாநாயகர் ரவிசங்கர், நிர்வாகிகள் பத்மநாதன், ரஜினிகாந்த், ஏர்போர்ட் விஜி,பெட்ரோல் பங்க் தேவா, எஸ்.ஆர்.அனிதா, மலைக்கோட்டை வினோத், உஸ்மான் பாபு ,வழக்கறிஞர்கள் எழிலரசி, கார்த்திகேயன், பாக்யராஜ், ரத்தினகிரி, ஜான் ரஸ்கின், சபி இர்பானுல்லா, காடுவெட்டி ரவி, லோகநாதன், வரகனேரி அரசு, எஸ்.ஆர். எம். அப்பாத்துரை, பவுன் டி.டி. கிருஷ்ணன், தென்னூர் ஆர். ராஜா, வழக்கறிஞர் சுரேஷ்ராஜ் , எம்ஜிஆர் நகர் கே.கே. என். கரிகாலன், எம்.ஏ. துரைப்பாண்டியன், வைத்தியநாதன், கேபிள் முஸ்தபா, பால்ராஜ், மணிகண்டன், கே.பி.டி. பவுன் ராஜ் ராம்குமார்,இன்ஜினியர் பரமசிவம், கோபால் லோகேஷ்,வைத்திநாதன், கருமண்டபம் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.