
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை கண்டறியும் புதிய கருவி ரயில்வே கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா திறந்து வைத்தார்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள இரண்டாவது நுழைவாயிலில் நேற்று பயணிகளின் உடைமைகளை கண்டறியும் புதிய கருவி திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இதனை திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பட்சேரா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திருச்சி ரயில் நிலையத்தில் பாதுகாப்பை
பலப்படுத்தும் வகையில் பயணிகளின் உடைமைகளை சரி செய்வதற்கும் வெடிகுண்டு கண்டறிதல் போன்ற குற்றங்களை தவிர்ப்பதற்காகவும் புதிய உடைமைகளை பரிசோதனை செய்யும் கருவி திறந்து வைக்கப்பட்டது.இந்த விழாவில் காவல் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, திருச்சி காவல் உட்கோட்டம், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

