Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காட்டுப்புதூரில் 82 வயது வரை கம்பீரமாக வாழ்ந்தவர் தடுக்கி விழுந்து பரிதாபமாக பலியான சோகம்.

0

'- Advertisement -

காட்டுப்புதூரில்

Ad banner

முதியவர் தவறி விழுந்து பலி .

 

தொட்டியம் காட்டுப்புத்தூர்

முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணவேலு (வயது 82).

இவர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார் இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி திடீரென இறந்தார். அதன் பின்னர் தனிமையில் இருந்த சரவண வேலு  சுகர் பிரசர் என எந்த நோய் நொடி இல்லாமல் கம்பீரமாக வாழ்ந்து வந்தார் .

இந்த நிலையில் வீட்டின் படிக்கட்டில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.இதில்அவரது முகம் மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.இருந்தபோதிலும் முதியவர் சரவணவேலு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இது குறித்து அவரது உறவினர் பழனிவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.