திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாக அலட்சியத்தால் மூதாட்டியின் கால் விரடுகளை கடித்து குதறிய எலிகள். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் காட்சியை கொண்டாடுவதிலேயே கவனம் செலுத்துவதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

திருச்சி அரசு மருத்துவமனை அலட்சியம்.சிகிச்சையில் இருந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை கடித்துக் குதறிய எலிகள் .
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி தமிழ்க்கொடி (வயது 68). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் எதிர்பாராதவிதமாகத் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருடைய கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள பொது வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குக் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த மூன்று தினங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த சூழலில் தமிழ்க்கொடி காலில் கட்டுடன் படுக்கையில் படுத்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவில் வார்டுக்குள் புகுந்த எலிகள், அவரது காலில் காயம் இருந்த பகுதியைத் தின்று கடித்துக் குதறியுள்ளன.அதீத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு எலிகள் கடித்தது தெரியவில்லை. ரத்த கசிவை கண்டசக நோயாளிகள் கூறிய பிறகே எலி கடித்தது குறித்து அவருக்கு தெரிந்துள்ளது.
இதுகுறித்து மூதாட்டியின் மகன் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.கழிவு நீர் மற்றும் உணவுப் பொருட்களால் எலிகள் வருவதாகவும் மருத்துவமனையை விரைவில் சீர்மைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.மக்கள் அரசு மருத்துவமனைகளில் அவதிப்படும் சூழலில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஜனநாயகம் திரைப்படத்தின் முதல் காட்சியை கொண்டாடுவதிலேயே கவனம் செலுத்துவதாக விமர்சித்த அவர் அரசு பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உரிய சிகிச்சியும் தகுந்த இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

