திருச்சி வ உ சி யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெகவினர்
திருச்சியில் சுதந்திர போராட்ட தியாகி வஉசி யின் 155 வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது சிறு உருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது …
இந்த நிகழ்ச்சியில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் , முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,வளர்மதி,முன்னாள் மாவட்ட செயலாளர் சீனிவாசன் , நிர்வாகிகள் வெல்லமண்டி ஜவர்கலால் நேரு ,ஆர் கே ராஜா , மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் ..

