Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சோமரசம்பேட்டை அருகே தென்னை மரத்தில் கள் இறக்கி ஆர்ப்பாட்டம்

0

'- Advertisement -

சோமரசம்பேட்டை அருகே  தென்னை மரத்தில் கள் இறக்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Ad banner

திருச்சி சோமரசம் பேட்டை அருகே அதவத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட மேலப்பேட்டையில் உள்ள தமிழக விவசாயிகள் சங்கம் தலைவர் மா.ப சின்னத்துரைக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கள் இறக்கி தமிழக விவசாய சங்கம் (கட்சி சார்பற்றது) மா. ப சின்னத்துரை தலைமையில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பனை தென்னை மர கள்ளுக்கு தடையை நீக்கீடு, போதைப் பொருளை ஒழித்திடு, கள் தடையை நீக்கி தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழக விவசாய சங்கம் மற்றும் தமிழ்நாடு பனையேறும் பாதுகாப்பு இயக்கம் உள்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.