Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாமுக நிறுவன தலைவர் பாரதராஜா யாதவ் சமுதாய நிர்வாகிகளுடன் திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் சந்திப்பு.

0

'- Advertisement -

Ad banner

பாரத முன்னேற்றக் கழக தலைவர்பாரதராஜா யாதவ் சமுதாய நிர்வாகிகளுடன் அதிமுக மாவட்ட செயலாளர் ஆவின் சி கார்த்திகேயன் சந்திப்பு.

திருச்சி மாநகர் மாவட்ட அ தி மு க செயலாளராக ,முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் சமீபத்தில் நியமிக்கப்ப்பட்டார்

அதனைத் தொடர்ந்து மாநகரில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றார்

இதன்படி யாதவ சமுதாயம் சார்பாக பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் மற்றும் சமுதாயம் சார்ந்த நிர்வாகிகளை பா.மு.க அலுவலகத்தில் கார்த்திகேயன் சந்தித்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது முதலில் அங்கு அலங்கரித்து வைக்கப்படிருந்த ஸ்ரீ கண்ணபிரான், முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக் கோன் திருவுருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயனும் அதிமுக நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செய்தனர்

பின்னர் அ தி.மு.க.மாவட்ட செயலாளர் கார்த்திகேயனுக்கும்.அ.தி.மு.க.நிர்வாகிகள் அனைவருக்கும் பா.மு.க தலைவர் பாரதராஜா யாதவும் பாமுக நிர்வாகிகளும்  பொன்னாடை அணிவித்து கெளரவித்தனர்

அதேபோல் பா.மு.க.நிர்வாகிகள் அனைவருக்கும் அதிமுக சார்பில் கார்த்திகேயன் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார்.

நிகழ்வில் கார்த்திகேயன் பேசுகையில்…அரசியலிலும் மக்களிடையேயும் அறியப்பட்ட நான் அதிமுக மாவட்ட செயலாளர் ஆன பிறகு பாகுபாடின்றி  அனைத்து சமுதாய தலைவர்களையும்  முன்னோடிகளையும் சந்தித்து வருகின்றேன் என்றார்.

தொடர்ந்து பாரதராஜா யாதவ் பேசுகையில்….

யாதவ சமுதாயத்திற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா உரிய அங்கீகாரமும் அரசியல் பிரதிநித்துவத்தையும் தொடர்ந்து வழங்கியது மட்டுமின்றி  முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோனுக்கு எக்மோரில் சிலையையும் அமைத்து அவரது ஜெயந்தி விழாவை முழுமையான அரசு விழாவாகவும் நடத்தி வந்தார் போக்குவரத்து கழகத்திற்கு அழகுமுத்துக்கோன் பெயரை சூட்டி அழகுபார்த்தார். இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து மேற்கொண்டார்

234 தொகுதிகளிலும் குறைந்த பட்சம் 10,000 முதல் அதிகபட்சமாக லட்சக்கணக்கான வாக்குகளை கொண்ட, விசுவாசம்  நிறைந்த யாதவ சமுதாயத்துக்கும் அதன் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழகத்திற்கும் தேர்தல்களின்போது உரிய பிரதிநித்துவதையும் அதிமுக வழங்கிட வேண்டும் என்றார்

இந்நிகழ்வில் அ.தி.மு.க.சார்பில் மாவட்ட துணை செயலாளர் வெல்லமண்டி ஜி.சண்முகம் தலைமை கழக பேச்சாளர் ஜெ.ஆரி பகுதி செயலாளர்கள் ஜெ .இலியாஸ் , டி..சுரேஷ் குப்தா , எடத்தெரு ஜி.பாபு , உறைந்தை என்.ஆர்..முத்தையா, காந்திநகர் ஜி. .சரவணன் திருநாவுகரசு, மாணவரனி செயலாளர் பால மோகன் ராஜ் வட்ட செயலாளர்கள் ஏ.ஜோஸப் செபா, டைமன் ஆர்.தாமோதரன்.எம்.ஏ..,சையது ரபீக் நிர்வாகிகள் எடத்தெரு ஆர்.கிருஷ்ணன், கே..அசோக், என்.பார்த்திப்பன், எம்.என்..பிரகாஷ் டி..கணேஷ், கோ.சீனிவாசன், பீட்டர்,.நந்தகுமார், பாத்திரக்கடை எஸ்.நடராஜன்,மீசை க.ராஜகோபால், பா.ஸ்ரீஜெனி கிளாரா, என்.முத்துகுமார் டி.கமலநாதன் ,  ஆவின் குணா , காளி எம்.நாராயணன் .ஜெ.மணிவண்ணன் ஜெ.சங்கரலிங்கம் ஆகியோரும்

பா.மு.க.சார்பில் அதன் அமைப்பு செயலாளர்கள் வே.செல்வம் எம்.ஆர்.இராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் சி.முத்தையன், ஆசைத்தம்பி., துபாய் ஆறுமுகம்,எஸ்.ராம்குமார்.டி.வி.கோயில் விஜய்,,உறையூர் ஹரி,பொருளாளர் எம்.பெரியசாமி, சமுதாய போராளிகள் திருவேங்கடம்,இளவரசு யாதவ் யாதவ்,செல்லப்பா,ஆர்.ஜி.ஆர்.,மீசை ராசு. எடத்தெரு முத்துகிருஷ்ணன்  ,சீனிவாசன்.நந்தகுமார் ,உள்பட ஏராளமானோர்பங்கேற்றனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.