ஜனநாயகன் வெளிவந்த திரையரங்கில் மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கி வித்தியாசமான முறையில் கொண்டாடிய திருச்சி ஆர் கே ராஜா

தமிழகம் முழுவதும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நடித்து வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் திருச்சி சோனா மீனா திரையரங்கில் நேற்று காலை திரையிடப்பட்டது.
இதனை கொண்டாடும் விதமாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் திருச்சி ஆர்.கே. ராஜா தலைமையில் 500 மரக்கன்றுகளும்,துணிப்பையுடன் இனிப்புகளும் திரையில் நடித்த தனது தலைவர் தளபதியும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்களின் கடைசி திரைப்படமான இந்த திரைப்படத்தை பார்த்து வெளிவந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கி வித்தியாசமான முறையில் கொண்டாடினார்கள் .
இந்த நிகழ்ச்சியில் திருச்சி ஆர்.கே. ராஜா தலைமை தாங்கி திரைப்படத்தை கண்டு களித்து வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் டிவிஎஸ் டோல்கேட் நந்தகுமார், அக்பர் அலி, திரைப்பட நடிகர் கெட்டப் ராஜேந்திரன், சரண்ராஜ், மணப்பாறை நடேஷ் குமார்,
தொட்டியம் பாரதிராஜா, ஹரிஹரன், கார்த்திக், சமயபுரம் சதீஷ்குமார், மண்ணச்சநல்லூர் சுரேஷ்குமார், மஞ்சதிடல் சிவா, அரியமங்கலம் ஆசிப்,சந்துக்கடை தனசேகர், கோகுல், தீபக் ,டேவிட், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

