Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கே.கே. நகரில் வீட்டில் விபச்சாரம் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக கைது

0

'- Advertisement -

Ad banner

திருச்சி கே.கே. நகரில் வீட்டில் விபச்சாரம் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக கைது ; பணம், 6 செல்போன்கள் பறிமுதல்.

திருச்சியில் வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

திருச்சி கே.கே.நகர் அன்பழகன் நகரில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக திருச்சி கேகே நகர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கேகே நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 3 பெண்கள், 2 ஆண்கள் என 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதானவர்களிடம் இருந்து ரூ5500 பணம், 6 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.