சமயபுரத்தில்

இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை
வறுமையால் விபரீத முடிவு .
சமயபுரம்
அருகே உள்ள மாணிக்கபுரம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் ஜேம்ஸ் இவரது மனைவி நகோமி சகாயராணி ( வயது 39)
இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
சமீப காலமாக பீட்டர் ஜேம்ஸ் குடும்பம் வறுமையால் வாடியது.இதனால் மனவேதனை அடைந்த சகாயராணி கடந்த மாதம் 13ம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார் உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மீண்டும் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவ்வாறு கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் சகாயராணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது தாய் டெய்சி புளோரா அளித்த புகாரின் அடிப்படையில் சமயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

