திருச்சி அரியமங்கலத்தில்

மூதாட்டி சலவைத் தொழில் செய்து சேர்த்த வாழ்நாள் சேமிப்பு திருட்டு
திருச்சி அரியமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 75) இவர் தினமும் காலை 7 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு, சலவை தொழிலுக்கு சென்று விடுவார் பின்னர் வேலை முடிந்தவுடன் மாலை 5 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், மாரியம்மாள் வேலைக்கு புறப்பட்டு சென்ற நேரம் பார்த்து, அவரது வீட்டு கதவின் பூட்டையும், பீரோ கதவையும் உடைத்து அதில் உள்ளே வைத்திருந்த ஆறு பவுன் தங்க நகை, ரூபாய் 95 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
தன் வாழ்நாள் முழுவதும் சலவைத் தொழில் மற்றும் சிறு சிறு கூலி வேலைகள் செய்து உழைத்து சம்பாதித்து, சேர்த்து வைத்திருந்த 5 மோதிரங்கள், 2 செயின் உள்ளிட்ட 6 சவரன் நகைகளும், 95 ஆயிரம் ரொக்கமும் திருட்டு போனதை கண்டு, மாரியம்மாள் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களை திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் தேடி வருகிறார்கள்.

