Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரை பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவது குறித்து அமைச்சர் கே.என். நேரு

0

'- Advertisement -

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது :

Ad banner

80 கோடி ரூபாயில் செலவில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது :

 

திமுக கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெறுகிறதா?

அமைச்சர்

கே. என். நேரு பேட்டி.

 

திருச்சி (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு வழித்தடங்களில் பிங்க் நிற 9 விடியல் பயண புதிய பேருந்து சேவையை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நகராட்சி நிருவாகத் அமைச்சர் கே.என். நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்தார்.

 

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணன்,மாநகர மேயர் அன்பழகன்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் லிட்., கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர்

பொன்முடி, திருச்சி மண்டல பொதுமேலாளர் சதீஷ்குமார, மத்திய மாவட்ட திமுக செயலாளர். வைரமணி,மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம் ,முன்னாள் மத்திய மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், மண்டலத் தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் கவிதா செல்வம்,ராமதாஸ் புஷ்பராஜ், மஞ்சுளா பாலசுப்பிரமணியன் ,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிடாப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்,

பகுதி செயலாளர்

மோகன் தாஸ்,வட்டச் செயலாளர் தனசேகர் மற்றும் போக்குவரத்து கழக அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

 

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

மேட்டூர் அணை வரும் 12-ந் தேதி திறக்கப்பட உள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல ஏதுவாக தமிழக முதல்வர் உத்தரவின்படி ௹ 80 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 

பாசனத்திற்கு ஏதுவாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த சம்பா பயிர் நடவு செய்யும் பொழுது அடுத்த கட்டமாக வாய்க்கால், கால்வாய்கள்

படிப்படியாக தூர்வாரப்படும்.

 

திருச்சி பாலக்கரை பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,

அந்தப் பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்தப் பணிகள் இன்னும் 9 தினங்களில் முடிவடையும்

பணிகள் நிறைவடைந்த உடன் புதிய சாலை போடப்படும் என்றார்.

திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாரே என வினா எழுப்பப்பட்டதற்கு..

இது குறித்து நான் எதுவும் கருத்து கூற இயலாது தலைமை முடிவெடுக்கும் என்றார்.

திருச்சி நகரப்பகுதி வழியே செல்லும் உய்யகொண்டான் கால்வாயில் பரந்து கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள் நிறைந்துள்ளதால் அதனை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

நகராட்சி பொருத்தவரை எந்தெந்த இடம் என நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் தூர் வாரும் பணியில் துவங்கப்பட்டுள்ளது.

சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட கடைகள் ஏலம் விடப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.