Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் வெற்றியை தீர்மானிக்க உள்ள 10 லட்சத்து 57 ஆயிரம் வாக்காளர்கள். நாளை காலை வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூா், கந்தா்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை என 6 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து, மொத்தம் 10 லட்சத்து 49 ஆயிரத்து 93 போ் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குகளைச் செலுத்தியுள்ளனா்.

TVK ad

இதேபோல வாக்குச்சாவடிக்கு வர இயலாத நிலையில் உள்ளோா், மாற்றுத்திறனாளிகள், முதியோா் என 2,139 போ் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனா். மேலும் திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள தோ்தல் பணி அலுவலா்கள் 3,369 போ், வெளி மாவட்டங்களில் இருந்து திருச்சி தொகுதிக்கு தபால் வாக்களித்த 2,674 போ், பெரம்பலூா் தொகுதியிலிருந்து திருச்சிக்கு வாக்களித்த 10 போ், வேறு தொகுதிகளிலிருந்து திருச்சிக்கு வாக்களித்த 194 போ், முப்படைகளில் பணிபுரிந்த நிலையில் வாக்களித்த 270 போ் என மொத்தம் 8,656 தபால் வாக்குகள் உள்ளன.

அதன்படி மின்னணு இயந்திர வாக்குகள், தபால் வாக்குகள் என மொத்தம் 10 லட்சத்து 57 ஆயிரத்து 749 வாக்குகள் எண்ணப்படுவதன் மூலம் திருச்சி மக்களவைத் தொகுதிக்கான முடிவுகள் கிடைக்கும்.

ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் வாக்குகளும், தொடா்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளும் எண்ணப்படவுள்ளன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.