மதுரை டாக்டர் குருசங்கர் நடத்தி வரும் மருத்துவமனையை அபகரிக்க திட்டமிடும் லாட்டரி அதிபர் மகனும் புதுச்சேரி எம்எல்ஏவுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் .
மதுரை டாக்டர் குருசங்கர் நடத்தி வரும் மருத்துவமனையை அபகரிக்க திட்டமிடும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் .
தென் தமிழகத்தில் தேவர் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக பாடுபட்டு தென் மாவட்ட மக்களுக்கு உயர்தரமான மருத்துவ சேவையை குறைந்த செலவில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு மதுரையில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனத்தை டாக்டர் என். சேதுராமன் அவர்களால் தொடங்கப்பட்டு அவரது மகன் டாக்டர் S. குருசங்கர் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு கடந்த 36 ஆண்டுகளாக தமிழகத்திலே மிகச்சிறந்த மருத்துவமனை என்று மத்திய மாநில அரசுகளால் சிறப்பான மருத்துவ சேவைக்கான பல விருதுகளை பெற்று இன்று வரை தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயன்பெறும் வகையில் இம்மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
தற்பொழுது இம்மருத்துவமனைக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு இம்மருத்துவமனையைப் பற்றி எதுவுமே தெரியாத, மக்களால் தமிழகத்தை விட்டு விரட்டப்பட்டு பாண்டிச்சேரியில் தஞ்சம் புகுந்து இந்தியாவில் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு அதிபர் சாண்டியாகோ மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவர் எங்கள் சமுதாயத் தலைவரின் அயராத உழைப்பினால் உருவாக்கப்பட்டு இன்று வரை தென் மாவட்ட மக்களால் சிறந்த மருத்துவமனை என்று போற்றப்படும் இம்மருத்துவமனையையும் மருத்துவமனை நிர்வாகத்தையும் களங்கம் விளைவிக்கும் வகையில் லாட்டரி மாபியாவினால் நடத்தப்படும் SS NEWS DIGITAL என்ற செய்தி சேனல் மூலம் உண்மைக்குப்புறம்பான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு அதிபர் சாண்டியாகோ மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை சமுதாயத்தின் சார்பாக எச்சரிக்கிறோம்.
மருத்துவமனையையும் மருத்துவமனை நிர்வாகத்தையும் களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப்புறம்பான செய்திகளை பரப்பி மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்திய செய்தியை லாட்டரி மாபியாவினால் நடத்தப்படும் SS NEWS DIGITAL என்ற செய்தி சேனலில் இருந்து முற்றிலும் நீக்கவேண்டும். மேலும், இந்த தவறான செய்தியை வெளியிட்டதற்கு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். மன்னிப்பு கோராத பட்சத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் எங்களின் சமுதாய மக்களின் சார்பாக சட்டரீதியான முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பதை மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்கள் உண்மைக்குப்புறம்பான தவறான செய்தியை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு சென்று தமிழக அரசின் பெயரையும் களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அணுகியுள்ளார். மேலும், உண்மைக்குப்புறம்பான தவறான செய்தியை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேவர் சமுதாயத்தில் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் .

