Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மூவர்ண தேசியக் கொடி பேரணி இன்று நடைபெற்றது.

0

'- Advertisement -

இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மூவர்ண தேசியக் கொடி பேரணி இன்று நடைபெற்றது.

Ad banner

மாவட்ட தலைவர் கே. ஒண்டி முத்து தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி, திருச்சி தெப்பக்குளம் அருகிலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. பேரணியில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தேசியக் கொடியை ஏந்தியபடி பங்கேற்றனர்.

பேரணியை பாஜக மாநில இணைப் பொருளாளர் டாக்டர் சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் ஒற்றுமை, தேசப்பற்று மற்றும் தேசிய உணர்வை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், பாஜகவினர் மூவர்ணக் கொடிகளை ஏந்தி உற்சாகமாக கலந்து கொண்டனர். பேரணி நடைபெற்ற பகுதிகளில் தேசியக் கொடிகள் பட்டொளி வீச, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேசப்பற்று முழக்கங்களை எழுப்பினர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் காளீஸ்வரன், மாநில துணைத் தலைவர் புவனேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவர் ரவிக்குமார், மாவட்ட செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் எஸ். சரவணன், அரசு நலத்திட்டப் பிரிவு மாநில நிர்வாகி எம்.பி. முரளிதரன், எஸ்.டி. பிரிவு மணிவேல், வர்த்தகத் துறை பி.ஆர். பாண்டியன், திருச்சி மகளிர் அணி மாவட்ட செயலாளர் மலர்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும், முன்னாள் மாவட்ட தலைவர்கள் வரகனேரி பார்த்திபன், திருமலை, ராஜேஷ் குமார், மாநில அரசு தொடர்பு பட்டியல் அணி இணை அமைப்பாளர் இந்திரன், மாவட்ட நிர்வாகிகள் பாலன், இல. கண்ணன், ஜி.டி. தினகர், விவேகானந்தன், மகேஸ்வரி ராஜேந்திரன், மோகன், தர்மராஜ், அனிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஊடகப் பிரிவு சார்பில் பாலச்சந்திரன், பிரபாகரன், முரளி, திருவேங்கடம், மருதை உள்ளிட்டோரும், துணைத் தலைவர் விஜயகுமார், கோபாலகிருஷ்ணன், சண்முகம், சமூக ஊடகப் பிரிவு ராஜேஷ் குமார், இளைஞரணி சேதுபதி, கேப்டன் நடராஜன், இளைஞரணி சந்தோஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் பேரணியில் கலந்து கொண்டனர்.

 

அதேபோல், உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு ராஜா, ஐ.டி. விங் உப்பிலி சீனிவாசன், சதேஷ், மண்டல தலைவர் பழனிவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த தேசியக் கொடி பேரணி மூலம், நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்வதுடன், தேச ஒற்றுமை மற்றும் தேசிய உணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் ….

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.