திருச்சி மாநகராட்சி EE கலைவாணி AEE செந்தில் பாஸ்கர் ஆகியோர் மீது பரபரப்பு லஞ்ச புகார்…நடவடிக்கை எடுக்குமா லஞ்ச ஒழிப்புத்துறை ?

திருச்சி மாநகராட்சியில் செயற்பொறியாளர் கலைவாணி AEE செந்தில் பாஸ்கர் ஆகியோர் மீது பரபரப்பு லஞ்ச புகார்…நடவடிக்கை எடுக்குமா லஞ்ச ஒழிப்புத்துறை ?
திருச்சி மாநகராட்சியில் பணியாற்றி வரும் செயற்பொறியாளர் (EE) கலைவாணி மீது பல்வேறு லஞ்ச வசூல் குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளது …
திருச்சி மாநகராட்சியின் திட்டப்பிரிவு (Planning) செயற்பொறியாளராக இருந்தவர் தான் கலைவாணி அப்போதே இவர் மீது நிறைய லஞ்ச கேட்ட புகார்கள் வந்தது உண்டு. இப்போது மாநகராட்சி செயற்பொறியாளராக பொறுப்பு வகிப்பதால் கேட்கணுமா என்ன . நேரடியாக லஞ்சம் கேட்டு வருகிறாராம்.
சிறிய கட்டிட அனுமதி முதல் பெரிய வர்த்தக வளாகங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களின் கட்டுமான அனுமதி வரை பல்வேறு பணிகளுக்காக அதிகளவில் பணம் கேட்கிறாராம். குறிப்பாக, திருச்சி விமான நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் நட்சத்திர தனியார் ஹோட்டல் கட்டுமான பணிக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் பல லட்சம் பேரம் பேசி பெரும் தொகையை வாங்கி கொண்டாராம். மேலும், திருச்சியில் செயல்படும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களை நேரடியாக தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பணம் பெறுகிறாராம். சிலரிடம் போன் மூலமாகவே டீலிங் பேசுகிறாராம். இதற்கு முன்பு இருந்த நடைமுறைகளை விட வெளிப்படையாகவே பணம் வசூலித்து வருகிறாராம்.
அதேபோல், சிறிய அளவிலான கட்டிட அனுமதிகளுக்குக் கூட வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக பணம் கேட்கப்படுவதாகவும், மாநகராட்சி அலுவலகத்திலேயே நேரடியாக பணம் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும், இந்த விவகாரம் மாநகராட்சி ஆணையருக்கு தெரியாது என்றும் அவர் ஏற்கனவே கலைவாணியை கண்டித்ததாகவும் சொல்கிறார்கள். ஆனாலும் கடந்த சில நாட்களில் மட்டுமே பல லட்சம் ரூபாய் வசூல் செய்து உள்ளர். அதேபோல் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் விதியை மீறிய கட்டப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றது. இந்த கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில சமூக ஆர்வலர்கள் வழக்கு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த கட்டிட உரிமையாளர்கள் சிலரை அணுகி அவர்களிடம் எதுவாக இருந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன் என்று அவர்களிடமும் பேச்சுவார்த்தை முடித்து அவர்களிடமும் பணத்தை சாமார்த்தியமாக ஆட்டையை போட்டு வருகிறாராம்.
அதேபோல் நடப்பது தமிழக வெற்றிக்கழக ஆட்சி. ஆனால், இந்த மாநகராட்சியில் தமிழக வெற்றிக் கழக கவுன்சிலர்கள் என்று ஒருவர் கூட கிடையாது. அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதுவும் அவர்கள் முன்பு திமுக கூட்டணியில் இருந்தவர்கள். ஆதலால் இந்த மாநகராட்சியில் நடக்கும் பல ஊழல்கள் வெளியே தெரிவதில்லை. இந்த நிலையில் தான் ஏற்கனவே இங்கு பணியாற்றிய பல அதிகாரிகள் வெளி மாவட்டத்துக்கு பணி மாறுதல் ஆகி சென்று விட்டனர். வந்திருப்பது பலரும் புதிய நபர்கள் அவர்கள் லஞ்சம் வாங்க தயங்கி வரும் வேளையில் தான், எங்கிருந்தோ வந்த உத்தரவின் பேரில் தான் கடந்த இரண்டு மாதங்களாக எந்தவித கவலையும் இல்லாமல் மாநகராட்சி கமிஷனர் பற்றி கவலைப்படாமல் , வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறாராம் கலைவாணி. அதேபோல் முன்பு ஒப்பந்தம்,மாநகராட்சி ரோடு , மாணவர் ரோடு மற்றும் சில ஒப்பந்த பணிகளை எடுத்த திமுக பிரமுகர்களிடம் கணிசமாக ஒரு தொகையை வாங்கி கொண்டு அவர்களுக்கு மீண்டும் சில பணிகளை கொடுத்து வருகிறாராம். அதில் விரைவில் பிரச்சனை வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். (மாநகராட்சிக்கு உதாரணமாக பத்து போர்டுக்கு பணம் கட்டிவிட்டு 20 போர்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது .அதாவது பாதி அன் அபிசியல் ஆக வைக்கப்பட்டது)
இதே பிளானிங் செக்சனில் உதவி செயற்பொறியாளரராக (AEE) இருப்பவர் செந்தில்பாஸ்கர். இவருடைய கையெழுத்து அத்தாரிட்டியை நிப்பாட்டி வைத்திருந்தார்கள். இந்த நிலையில் மேயர் அன்பழகன் மூலமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சில பல லட்சங்களை கொடுத்து ஐந்து மண்டலத்துக்கும் கையெழுத்து அத்தாரிட்டியை பெற்று விட்டாராம்… செந்தில் பாஸ்கர். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் கலைவாணியை விட செந்தில்பாஸ்கர் அதிகம் லஞ்சம் கேட்பாராம். இதனால் யார் அதிகம் லஞ்சம் வாங்குவது என்கிற போட்டி இருவருக்கும் நிலவுவதோடு, யார் முதலில் இன்ஸ்பெக்சன் செல்வது என்பதில் இருவருக்கும் இப்போது சண்டையே நடக்கிறதாம். செந்தில்பாஸ்கர் கையெழுத்து அத்தாரிட்டி வாங்கியதில் மாநகாரட்சி மற்ற அதிகாரிகள் மத்தியிலும் அதிருப்தி நிலவுகிறதாம். அதேபோல் செந்தில்பாஸ்கர் கீழே வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கும் மறைமுக பாலியல் டார்ச்சர் கொடுப்பதாகவும் (அதாவது இவருக்கு தனியாக அரசு ஜீப் இருந்தும் இன்ஸ்பெக்சன் செய்ய தனது இரு சக்கர வாகனத்தில் பெண் ஊழியர்களை அமர வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுக் கொண்ட வாகனம் ஓட்டுவாராம்) அந்த பெண் ஊழியர்கள் இதை யாரிடம் சொல்லி அழுவது என்கிற வேதனையில் இருப்பதாகவும்கூறப்படுகிறது …
ஆகையால் இந்த இருவருமே இந்த திருச்சி மாநகராட்சியில் பணிபுரிவது அவ்வளவு நல்லதல்ல என மாநகராட்சி ஊழியர்களே புழம்பி வருகின்றனர்
சிறிய அளவிலான லஞ்சம் பெற்ற அரசு ஊழியர்களை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பல லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாநகராட்சி முக்கிய அதிகாரிகளான இவர்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களின் விருப்பமாகும் ….

