- திருச்சியில் காவலாளி வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசம் ஆனது.
- திருச்சி மாநகரில் நேற்று மாலை பலத்த சுறாவளி காற்று வீசியதுடன், இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மாநகரில் பல பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை மின்சாரம் அடிக்கடி தடைபட்டது.
- இந்தநிலையில் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் உலகநாதபுரம் பகுதியிலும் நேற்று மாலை மழை பெய்த போது 6.45 மணி அளவில் மின்சாரம் தடைபட்டது. பின்னர் மீண்டும் வந்தது.
- இவ்வாறு அடிக்கடி மின்தடை ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வந்த வண்ணம் இருந்த போது, நள்ளிரவு 11 மணி அளவில் மின்சாரம் வந்த போது, கருணாநிதி வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் ஒரு மின்கம்பத்தில் இருந்து தீப்பொறி வந்தது. அத்துடன் கோவில் அருகில் உள்ள சுந்தர்ராஜ் என்பவரின் வீட்டிலும் மின்கசிவு காரணமாக தீப்பற்றியது. உடனே தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
- அதேநேரம் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரும் வெடித்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- சுமார் அரைமணி நேரத்துக்கும் மேல் போராடி தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசம் ஆனது.
- தீ விபத்து நடத்த வீட்டின் உரிமையாளர் சுந்தர்ராஜ் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவ நேரத்தில் அவர் வேலைக்கு சென்றுவிட்டார். அவருடைய மனைவி அருகில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
- இதனால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்த சம்பவம் தொடர்பாக கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.திருச்சியில் காவலாளி வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசம் ஆனது.
திருச்சி மாநகரில் நேற்று மாலை பலத்த சுறாவளி காற்று வீசியதுடன், இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மாநகரில் பல பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை மின்சாரம் அடிக்கடி தடைபட்டது.
இந்தநிலையில் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் உலகநாதபுரம் பகுதியிலும் நேற்று மாலை மழை பெய்த போது 6.45 மணி அளவில் மின்சாரம் தடைபட்டது. பின்னர் மீண்டும் வந்தது.
இவ்வாறு அடிக்கடி மின்தடை ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வந்த வண்ணம் இருந்த போது, நள்ளிரவு 11 மணி அளவில் மின்சாரம் வந்த போது, கருணாநிதி வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் ஒரு மின்கம்பத்தில் இருந்து தீப்பொறி வந்தது. அத்துடன் கோவில் அருகில் உள்ள சுந்தர்ராஜ் என்பவரின் வீட்டிலும் மின்கசிவு காரணமாக தீப்பற்றியது. உடனே தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அதேநேரம் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரும் வெடித்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் அரைமணி நேரத்துக்கும் மேல் போராடி தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசம் ஆனது.
தீ விபத்து நடத்த வீட்டின் உரிமையாளர் சுந்தர்ராஜ் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவ நேரத்தில் அவர் வேலைக்கு சென்றுவிட்டார். அவருடைய மனைவி அருகில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.