Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பஸ் ஸ்டாண்ட், சத்திரத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் , முதியவர் உடல்கள் மற்றும் தவறி விழுந்த மூதாட்டி பலி….

0

'- Advertisement -

 

Ad banner

1.திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்த வாலிபர் சாவு ..

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் டிராவல்ஸ் அருகில் சுமார் 32 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மயங்கி விழுந்து கிடப்பதாகக் கிராம நிர்வாக அலுவலர் சரவணனுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்துகண்டோன்மென்ட் போலீசார் விரைந்து சென்று அந்த நபரை திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளர் சிவபிரகாசம் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

2.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் உடல்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் லால்குடி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று சுமார் 60 வயதுடைய அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் அசைவு இல்லாமல் கிழே கிடந்தார். இதையடுத்து அங்கிருந்த ஜூஸ் கடை ஊழியர் அருண்குமார் அளித்த தகவலின் பேரில், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பிறகு மருத்துவக் குழுவினர் பரிசோதித்த போது அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் குமரவேல் வழக்குப் பதிவு செய்து இறந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

3.​ துறையூரில்  மூதாட்டி தவறி விழுந்த சாவு

திருச்சி துறையூர் மலையப்பன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி இவரது மனைவி ஜார்னா பீவி ( வயது 62). இவர் அங்குள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் பாத்ரூம் செல்லும்போது கால் தவறி கீழே விழுந்தார்.இதில் அவரது இடுப்பு மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜார்னா பீவி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் பாபுலால் கொடுத்த புகாரின் அடிப்படையில் துறையூர் போலீசார்  வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.