Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தாராபுரம் பிரச்சாரத்தில் தொண்டர்களை தாக்கிய கே. என். நேரு

0

'- Advertisement -

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்.6 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த சூழலில் தேர்தல் பரப்புரை இன்று நிறைவடைந்தது. இந்த நிலையில், திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தாராபுரத்திற்கு தேற்று வருகை தந்தார். அப்போது திமுக நிர்வாகிள் மற்றும் திமுக தொண்டர்கள் அனைவரும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

Ad banner

தாராபுரம் தொகுதியில் களமிறங்கியுள்ள திமுக வேட்பாளரை ஆதரித்து, திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு நகரின் முக்கிய வீதிகள் வழியாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். பிரச்சார வாகனத்தில் அவர் நகர்ப் பகுதியைக் கடக்க முயன்ற போது, அமைச்சரைக் காண்பதற்கும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கும் திமுக தொண்டர்களும் பொதுமக்களும் வழியெல்லாம் திரண்டனர்.

அமைச்சரை நெருங்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், தொண்டர்கள் திடீரென பிரச்சார வாகனத்தை நாலாபுறமும் சூழ்ந்துகொண்டனர். நொடிக்கு நொடி தொண்டர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால், பிரச்சார வாகனம் மேற்கொண்டு எந்தப் பக்கமும் நகர முடியாமல் அங்கே ஸ்தம்பித்தது.

 

கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய சூழலில், வாகனத்தில் இருந்த அமைச்சர் கே.என்.நேரு திடீரென கடும் ஆத்திரமடைந்தார். தன் வாகனத்தை மறைத்துக்கொண்டு நின்ற தொண்டர்களை நோக்கி ஆவேசமாக கையை ஓங்கித் தள்ளியும், தாக்கியும் வழியை ஏற்படுத்த முயன்றார்.

 

அமைச்சர் கோபத்தில் செய்த இந்த ஆவேச நடவடிக்கை, அங்கிருந்த சிலரின் செல்போன் கேமராக்களில் துல்லியமாகப் பதிவானது. தொண்டர்களிடம் அமைச்சர் கோபத்தை வெளிப்படுத்தி நடந்து கொண்ட அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது ..

 

இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பிரச்சாரக் களத்தில் அரங்கேறிய இந்தச் சம்பவம் தேர்தல் காய்ச்சலை மேலும் அதிகரித்துள்ளது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் அமைச்சர் நடந்துகொண்ட விதம் குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் வாக்களிக்கும் தொண்டர்கள் மீதே அமைச்சர் வன்முறையை வெளிப்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இச்சம்பவம் பொதுமக்களிடையேயும், திமுக தொண்டர்களிடையேயும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.