இன்றைய (21-04-2022) ராசி பலன்கள்
மேஷம்
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை துணைவரின் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் புதிய ஒப்பந்தங்களின் மூலம் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அஸ்வினி : ஆதாயம் உண்டாகும்.
பரணி : மேன்மை ஏற்படும்.
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
—————————————
ரிஷபம்
நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பழைய நினைவுகளால் மனதில் குழப்பமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவி காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். இன்னல்கள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : காலதாமதமான நாள்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
—————————————
மிதுனம்
எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார பணிகளில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள். செய்கின்ற முயற்சிக்கு உண்டான பாராட்டும், மதிப்பும் கிடைக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிருகசீரிஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
திருவாதிரை : வெற்றிகரமான நாள்.
புனர்பூசம் : மதிப்பு மேம்படும்.
—————————————
கடகம்
விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : மேன்மையான நாள்.
பூசம் : புரிதல் உண்டாகும்.
ஆயில்யம் : உதவி கிடைக்கும்.
—————————————
சிம்மம்
புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். கலை தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். கனிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : தடைகள் குறையும்.
பூரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
—————————————
கன்னி
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் வழியில் ஆதரவான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
—————————————
துலாம்
சாதுர்யமான சிந்தனைகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். தனவரவின் மூலம் திருப்திகரமான சூழ்நிலைகள் அமையும். மனதிற்கு விரும்பிய செயல்களை செய்து மகிழ்வீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களை பற்றி புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். தடைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : விருப்பம் நிறைவேறும்.
விசாகம் : புரிதல் உண்டாகும்.
—————————————
விருச்சிகம்
மனதிற்கு பிடித்த ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். லாபகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
விசாகம் : மாற்றமான நாள்.
அனுஷம் : முதலீடுகள் மேம்படும்.
கேட்டை : இன்னல்கள் குறையும்.
—————————————
தனுசு
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். இன்னல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : குழப்பம் நீங்கும்.
பூராடம் : ஆதாயகரமான நாள்.
உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.
—————————————
மகரம்
நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். பயணம் தொடர்பான விஷயங்களில் மாற்றம் உண்டாகும். அருள்தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். சோர்வு நீங்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவோணம் : மாற்றம் உண்டாகும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————
கும்பம்
வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த இன்னல்கள் குறையும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயகரமான சூழ்நிலைகள் ஏற்படும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : லாபம் கிடைக்கும்.
பூரட்டாதி : ஆதாயகரமான நாள்.
—————————————
மீனம்
வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். காப்பீடு தொடர்பான பணிகளில் தனவரவு கிடைக்கும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். புதிய அனுபவத்தின் மூலம் புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
ரேவதி : புதுமையான நாள்.
—————————————