ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

14ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது .
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் 108 வைணவ தளங்களில் முதன்மையானதுமான திருவரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருப்பது, இக்கோயிலின் சிறப்பாகும். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா கொண்டாடப்படும். இந்தாண்டு திருவிழா இன்று மே 6 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகியது.
இன்று அதிகாலை 1 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தா னத்திலிருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டப வருகை புரிந்தார். அங்கு அதிகாலை 3.30 மணிக்கு மீன லக்னத்தில் சித்திரை
திருவிழா கொடியேற்றும் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாளை 7ந் தேதி காலை பல்லக்கிலும், மாலை கற்பக விருக்ஷத்திலும், 8ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வானத்திலும், 9ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும்,
10 ந் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும்,
11ந்தேதி காலை ஹம்ச வாகனத்திலும், மாலையானை வாகனத்திலும்,
மே 12 ந் தேதி நெல்லளவு கண்டருளலும்,1
3 ந் தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாக னத்தில் வையாளி கண்டருளல் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. இதைத் தொடர்ந்து வருகிற 14 ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேர் திருவிழா நடைபெறுகிறது. அன்று நம்பெரு மாள் காலை 4.45 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளுகிறார்.
இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். வருகிற 15 ந் தேதி கொடி இறக்க நிகழ்ச்சியும், 16 ந் தேதி மாலை நம்பெருமாள் ஆளும்பல்
லக்கில் எழுந்தருளுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், செயல் அலுவலர் வெங்கடேசன், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

